அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

Pronouns


Instead of nouns we can use pronouns. நான், நாம், நாங்கள், நீ, நீங்கள், அவன், அவள், அது, அவர்கள், அவை, இது, இவள், இவன், இவர், and இவர்கள் are the basic pronouns.In Third person the words differ based on the distance. If they are nearer they are இது, இவள், இவன், இவர், இவர்கள், and இவை. If they are far then அது, அவன், அவள், அவர்கள், and அவை will be used.


Pronouns Sigu

English Tamil
I நான்
We நாங்கள்
Our எங்கள்
You(singular) நீ
You(plural,with respect) நீங்கள்
He(near) இவன்
She(near) இவள்
They (near,upper class) இவர்கள்
this(lower class) இது
They(near lower class) இவை
He(far) அவன்
She(far) அவள்
They (far,upper class) அவர்கள்
that(lower class) அது
They(far, lower class) அவை

மறுபெயர்


பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக பயன் படுத்தப்படும் சொற்களே மறு பெயர் என்று அழைக்கப்படுகின்றன.நான் நாம் நாங்கள் நீ நீங்கள் அவன் அவள் அது அவர்கள் அவை இது இவள் இவன் இவர் இவர்கள் என்பவை மறு பெயர்களாகச் செயல் படுகின்றன. படர்க்கை இடங்களில் உள்ள பெயர் சொல் தூரத்தைக் கொண்டு வேறுபடும். பக்கத்தில் இருப்பவர்களைக் குறிக்கும் போது இது இவள் இவன் இவர் இவர்கள் இவை என்ற சொற்கள் பயன் படுத்தப்படும். தூரத்தில் இருப்பவர்களைக் குறிக்கும் போது அது அவன் அவள் அவர்கள் அவை என்ற சொற்கள் பயன் படுத்தப்படும். அண்மைச் சுட்டு எழுத்துக்கள், சேய்மைச் சுட்டெழுத்துக்கள் பயன் பாட்டிலிருப்பதைக் குறித்துக் கொள்ளவும்.