அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

தமிழ் எழுத்துக்களின் அறிமுகம்


தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப் படும்.


தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப் படும்.

  1. உயிர் எழுத்துக்கள்- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஓள.(12)
  2. மெய் எழுத்துக்கள் க், ங், ச், ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன். (18)
  3. உயிர்மெய் எழுத்துக்கள் க்+அ=க, ங்+அ= ங (216)
  4. ஆய்தம்ஃ.(1)

இதே தமிழ் எழுத்துக்கள் தங்களின் ஒலியின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. குறுகிய ஒலி கொண்டு,ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் என அழைக்கப்படும். உயிரெழுத்துக்களான அ, இ, உ,எ,ஒ குறில் எழுத்துகளின் எடுத்துக்காட்டாகும். நீண்ட ஒலியுடன் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் என்று அழைக்கப்படும். உயிரெழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓள நெடில் எழுத்துக்களின் எடுத்துக் காட்டாகும். மிகக் குறுகிய ஒலியுடன் அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் ஒற்று என்று அழைக்கப்படும். மெய் எழுத்துக்களான க்,ங்,ச்,ஞ்.ட்.ண்.த்.ந்.ப்.ம்.ய்.ர்.ல்.வ்.ள்.ற்.ன் ஒற்று ஆகும். ஆய்த எழுத்து ம் ஒற்று ஆகும்.


முதலெழுத்துக்கள் சொற்கள் அமைய அடிப்படையாக உள்ளன. உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் முப்பதும் முதல் எழுத்துக்கள் ஆகும். சார்பெழுத்துக்கள் முதல் எழுத்துக்களைச் சார்ந்து சொற்களை அமைக்கின்றன.


வினா எழுத்துக்கள் எழுத்துக்கள் கேள்விகள் உருவாக உதவும் அவை ஆ யா ஓ எ ஏ என்பன. எ, யா என்ற இரண்டு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.(எது? யார்? ஏன்?) ஆ ஓ இவை இரண்டும் சொல்ல்லின் கடைசியில் வரும். (அதுவா? அவளுக்கா?) வினா எழுத்துக்களை அகவினா, புறவினா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். எது? யார்? ஏன்? என்ற சொற்களில் எ,யா,ஏவை எடுத்தால் பொருள் தராது. வினா எழுத்தை எடுத்து விட்டா

ல் பொருள் தரமுடியாத வினாக்கள் அகவினா எனப்படும். புறவினா என்றால் வினா எழுத்துக்களை எடுத்தாலும் பொருள் தரும்.(நீதானா? அவனா?) நீதான் +ஆ அவன்+ஆ என்று பிரித்தால் நீ தான்,அவன் தான் என்று பொருள் தருகிறது.


சுட்டு எழுத்துக்கள். உயிர் எழுத்துக்கள் அ இ உ மூன்றும் சுட்டிக் காட்டுவதற்கு பயன் படுவதால் சுட்டெழுத்துக்கள் எனப்படும். உ என்ற எழுத்து அதிகமாகஉபயோகப்படுத்தப் படுவது இல்லை. அருகில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுவது அண்மைச் சுட்டு. இவள் இது என்ற சொற்கள் நல்ல எடுத்துக்காட்டுக்கள். தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டும் போது அண்மைச் சுட்டு.அவள்,அது என்ற சொற்கள் எடுத்துக்காட்டுகள் ஆகும். அ, இ என்ற எழுத்தை எடுத்து விட்டால் பொருள் இல்லை.அவன் இவள் இது அது என்ற சொற்களில் சுட்டெழுத்துக்களை எடுத்து விட்டால் பொருள் எதுவும் இல்லை இவை அகச்சுட்டுக்கள் ஆகும் அ, இ என்ற எழுத்தை எடுத்து விட்டாலும் பொருள் தரும்.இவை புறச் சுட்டுக்கள் ஆகும். அவ்வீடு, இம்மரம், அக்குளம், இப்புத்தகம் என்ற சொற்களில் அ, இ என்ற எழுத்துக்களை எடுத்து விட்டாலும். வீடு, மரம், குளம், புத்தகம் என்று பொருள் தரும்.


தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப் படும்.அவை உயிர் எழுத்துக்கள்,மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுதம்.இந்த எழுத்துக்களை முதல் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் வினா எழுத்துக்கள் சுட்டு எழுத்துக்கள் என்றும் வகைப்படுத்தலாம்.Letters:An introduction

There are four types of Tamil letters.

  1. Vowels - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஓள.(12)
  2. Consonants- க், ங், ச், ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன். (18)
  3. Uyirmey letters க்+அ=க, ங்+அ= ங (216)
  4. Ayudham ஃ (1)

These same letters are also are classified based on the syllable sounds. Kurril is the short sound and Nedil is the long sound. Kurril takes one second to pronounce. Neddil needs two seconds to pronounce. In vowels the letters அ,இ,உ,எ,ஒ are kurril.In vowels the letters ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ, ஒள are neddill. Ottrru takes only half a second to pronounce. The consonants க்,ங்,ச்,ஞ்.ட்.ண்.த்.ந்.ப்.ம்.ய்.ர்.ல்.வ்.ள்.ற்.ன் also has only half second duration. The letter ayyudham also only takes half a second to pronounce. So consonants and the ayyudham are called ottrru.

Letters also can be differentiated in to two other ways. One is called as main letters and the second one is dependent letters. Vowels and Consonants are main letters. Dependent letters are dependent on main letters.

The letters ஆ,யா,ஓ,எ, ஏ are also categorized as letters that help ask questions.They are called vina. Vina means queation. These letters form questions. They are called aggavina and puRravina Aggavina means the questioning letters are part of the words to be meaningful.If we remove the letters the words will have no meaning.எது? யார்? ஏன்? in these words if we remove எ,யா,ஏ. , there is no meaning. puRavinaa means the letters joins the word to ask questions. If we remove the questioning letter the words will still give meaning to the word. In these questins நீதானா?அவனா? when we split the words like நீதான் +ஆ, அவன்+ஆ and remove the questioning letter ஆ the words நீ தான் , அவன் will still give meaning.

Once again the letters are categorized as pointers. The vowels அ இ உ are called pointers. In Tamil they are called chuttu. Chuttu means pointing. When the words point to things nearby it is called “annmaichuttu” இவள்(this male) இது(this one) are good examples. When we use these letters to point to far away objects they are called “saimaichuttu” அவன்(that man) அது(That one) are good examples. When the pointer letter is part of the word to give meaning it is “aggachchuttu”.அவன் இவள் இது அது are the samples of aggachuttu . If we remove the the letters அ, இ there is no meaning. In the same way “Purrachchuttu” means the letters joins the word to point those objects.If we remove the letter the words will still give meaning to the word.The words அவ்வீடு, இம்மரம், அக்குளம், and இப்புத்தகம் are good examples. If we remove the letters அ, இ they words still give meaning as வீடு(house), மரம்(tree), குளம்(pond), புத்தகம்(book). Pointers are also refered as pronouns.

In conclusion, Tamil letters are four types vowels, consonants. Uyirmey and Ayudham. These letters are also classified as Main letters, dependent letters , letters asking questions and pointers.