அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

Dependent letters

Introduction

Dependent letters are allabadi and kuttrriyaal. As we practice reading we may doubt what will happen when we combine the words to make words. Sometimes the short sounds (குறில்கள்) are longer than usual. Other times there are chances for a longer(நெடில்கள்) sound to come out shorter. The lengthening of the sound of the letter is called aLLabadai. Shorter sounding letters are called kuttrriyal.Allabadi is of two types. Uyiirrallabadi otRRaLLabadai. Kuttrriyal are kuttriyalugaram, kuTTrriyaligaram, Igaarakurukkam, Igaarakurukkam, owgarakurrukkam, Makarakurrukkam, Aayuthak, kuRukkam.


சார்பு எழுத்துக்கள்


அறிமுகம்

சார்பு எழுத்துக்கள் அளபடை குற்றியல் என இரு வகைப்படும். தமிழில் படிக்கும் போதோ எழுதும் போதோ இரு வார்த்தைகளைச் சேர்க்கும் போது குறுகிய ஒலியுடைய எழுத்துக்கள் (குறில்கள்) நீட்டி ஒலிக்க வேண்டியத் தேவையிருக்கலாம். சில சமயங்களில் நீண்டு ஒலிக்கும் எழுத்துக்கள் குறுகி வருவதும் உண்டு. ஒலிகள் நீண்டு வரும் போது அவை அளபடை என்று அழைக்கப்படுகின்றன. குறுகி ஒலிக்கும் எழுத்துக்கள் குற்றியல் என்று அழைக்கப்படுகிறது. அளபடை இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது. அவை உயிரளபடை மற்றும் ஒற்றளபடை என்பதாகும். குற்றியல் குற்றீயலுகரம், குற்றியலிகரம் ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று வகைப்படும்.


Uyiirrallabadi

When the short vowels are pronounced for an extended time other than a second it is called uyiraLLabadai. These elongated sounds will happen at the beginning, middle and the ending of the words. Usually the Long vowels ஆ ஈ,ஊ, ஏ,ஐ,ஓ ஓள will sound elongated than their two seconds.


உயிரளபடை

உயிர் எழுத்துக்களில் நீண்ட ஒலி உடைய நெடில்கள், சில நேரங்களில் தன்னுடைய இயல்பான இரு வினாடிகள் அளவைத் தாண்டி ஒலிக்கும். அப்போது அந்த நெடில் உயிர் எழுத்துக்கள்ஆ ஈ,ஊ, ஏ,ஐ,ஓ ஓள உயிரளபடை என்று அழைப்படும். எழுத்துக்களிம் தொடக்கத்திலும் நடுவிலும் இறுதியிலும் அவ்வாறு ஒலி அளவில் மாறுபாடு ஏற்படும்.


ottRRaLLabadai

When the consonants and aayudham are pronounced for a longer period than half a second it is called ottRRaLLabadi. ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் and the letter ஃ will elongate their sound in the middle and the end of the words. Allabadi letters are mostly used when writing grammatically correct poems or verses called “ceyyuLL”


ஒற்றளபடை

மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் இயல்பில் அரை வினாடி நேரத்திற்கே ஒலிக்கும். அதை விட்டு சில நேரம் அவை ஒரு வினாடி நேரத்திற்கு நீட்டு ஒலிக்கும் இது ஒற்றளபடை என்று அழைக்கப் படும். மெய் எழுத்துக்கள் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் மற்றும் ஆய்த எழுத்து ஃ ஆகியவை இவ்வாறு சொற்களின் மத்தியிலும் இறுதியிலும் ஒலிக்கும்.செய்யுளில் மட்டுமே அளபடை என்ற ஒலி மாற்றம் நிகழும்.


kuttriyall

When there is a need to shorten a sound of a letter compare to its nature it is called kuttriyal. kurumai(smaller)+iyal (the sound). When we shorten the sound of one second s to half a second, it is considered the kuttriyall. You can classify them as kuttriyalugaram(உ). kuRRiyaligarram(இ) aikaarakkuRukam, (ஐ)owgarakuRukkam(ஒள) majarakuRukkam(ம்) and ayyudahkuRukkam(ஃ)based on the shortened letters.


குற்றியல்

இயல்பிலேயே வரும் ஒலியைக் குறுக்கி ஒலிப்பது குற்றியல் என்று அழைக்கப்படுகிறது. (குற்று+ இயல்). இயல்பிலேயே குறுகி ஒலிக்கும் ஒரு மாத்திரைக் குறில்கள் அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும் போது அவை குற்றியல் என்று அழைக்கப்படுகிறது. குறுகி ஒலிகளின் எழுத்துக்களைக் கொண்டு, குற்றியலுகரம், (உ). குற்றியலிகரம்(இ), ஐகாரக் குறுக்கம்(ஐ), ஒளகாரக் குறுக்கம்(ஒள),மகரக்குறுக்கம்(ம்), ஆய்தக் குறுக்கம் (ஃ) என வகைப் படுத்தப்படுகிறது.


kuttrrriyalugaram(உ)

In some places the letter உ needs to sound shorter than the one second,then it is called kuRRiyalukaram.The letter உ refered as ugaram, follows the long vowels and joins the consonants க்,ச்,ட்,த்,ப் ற் and becomes கு,சு,டு து,பு,று. These letters will have a shorter duration than one second. They are called neddil thodar kuttriyallukaram, that is the letter உ followed by the hard sounding consonants. Example ஆடு காடு காசு.


Ayyudhath thodar kuttriyallugaram is The letter உ follows the ஃ and joins the consonants க்,ச்,ட்,த்,ப் ற் and becomes கு,சு,டு து,பு,று. it will have a shoter sound. Example அஃது எஃகு.

Mostly when we combine words the உ letter will have the sound of இ, This is called uyir thodar kuRRiyalukaram.

When the உ sound follows two short sounds or a short and a long sound in a word the syllable will sound shorter.


When the கு,சு,டு து,பு,று letters follow hard sounding consonants(க்,ச்,ட்,த்,ப்,ற்) they are called vanthodar kuttriyallugaram. That is the உ letter sound is following the hardsounding consonants. Examples சுக்கு, பட்டு. Like wise when the கு,சு,டு து,பு,று letters follow soft sounding consonants(ஞ்,ங்,ண்,ந்,ம்,ன்) they are called menthodar kuttriyallugaram. That is the உ letter sound is follwing the soft sounding consonants. examples பஞ்சு, நண்டு, சந்து. Also when the கு,சு,டு து,பு,று letters follow mid sounding consonants(ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) they are called idaith thodar kuttriyallugaram. That is the உ letter sound is following the soft sounding consonants. Examples சார்பு, மூழ்கு.


குற்றியலுகரம்(உ)

உயிரெழுத்தான “உ” சில நேரங்களில் ஒலிப்பதற்கு தன் இயல்பான ஒரு வினாடி நேரத்தை விடக் குறைவாக எடுத்துக் கொள்ளும் போது குற்றியலுகரம் என்று அழைக்கப்படுகிறது. நெடில் உயிரெழுத்துக்களைத் தொடர்ந்து வரும் “ உ” க்,ச்,ட்,த்,ப் ற் என்ற மெய் எழுத்துக்களோடு சேர்ந்து கு,சு,டு து,பு,று என்று மாறும் போது அவை அரை வினாடி நேரமே ஒலிக்கும். இவை நெடில் தொடர் குற்றியலுகரம் என்று அழைக்கப்படும். உதாரணங்கள் ஆடு காடு காசு.

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் உகர எழுத்து, க்,ச்,ட்,த்,ப் ற்என்ற மெய் எழுத்துக்களோடு சேர்ந்து கு,சு,டு து,பு,று என்று மாறும் போது குறைந்த ஒலியைக் கொண்டு இருக்கும். எடுத்துக் காட்டுஅஃது எஃகு. அது +இல்லை அதில்லை. அரசு+ஆட்சி அரசாட்சி இரு வார்த்தைகளை இணைக்கும் போது முதலில் வரும் சொல்லின் இறுதி ஒலியாக உ வந்து அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்தாக இ வரும் போது உ எழுத்தின் ஒலி குறைந்து ஒலிக்கும்.


இரு குறுகிய ஒலி உடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போதும், ஒரு குறில் ஒரு நெடில் என்று இரு எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போது உ என்ற எழுத்து குறைந்த நேரமே ஒலிக்கும். எடுத்துக்காட்டுகள் வயிறு வரகு, விடாது.அழகு அரசு பாலாறு பண்பாடு


கு,சு,டு து,பு,று என்ற உகர ஓசையுடைய எழுத்துக்கள் வல்லின மெய்யெழுத்துக்களைத் (க்,ச்,ட்,த்,ப்,ற்)தொடர்ந்து வரும் போது அவர்றின் ஓசைக் குறைந்து ஒலிக்கும் அது வன்தொடர் குற்றியலுகரம் என்று அழைக்கப்படும் சுக்கு, பட்டுகு,சு,டு து,பு,று என்ற உகர ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லின மெய்யெழுத்துக்களைத் (ஞ்,ங்,ண்,ந்,ம்,ன்) தொடர்ந்து வரும் போது அவற்றின் ஓசைக் குறைந்து ஒலிக்கும் அது மென்தொடர் குற்றியலுகரம் என்று அழைக்கப்படும் பஞ்சு, நண்டு, சந்து. கு,சு,டு து,பு,று என்ற உகர ஓசையுடைய எழுத்துக்கள் இடையின மெய்யெழுத்துக்களைத் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) தொடர்ந்து வரும் போது அவற்றின் ஓசைக் குறைந்து ஒலிக்கும் அது இடைத்தொடர் குற்றியலுகரம் என்று அழைக்கப்படும் சார்பு, மூழ்கு


Muttiyalugaram

The letter உ is called muttriyallugam when it takes the whole one second to make the proper sound உரல், உயிர். In these words பசு படு அது உ takes the one second. The letters சு டு து are at the end of these words take only one second to pronounce.


முற்றியலுகரம்

முற்றியலுகரம் பொதுவாக தன்னுடைய அளவில் குறையாமல் வரும் போது அது முற்றியலுகரம் என்று அழைக்கப்படும். இது உகரம் சொல்லின் முதலில் வந்தாலும், இடையில் வந்தாலும் இறுதியில் வந்தாலும் தன்னுடைய ஒரு மாத்திரையிலிருந்துக் குறையாமல் ஒலிக்கும். உரல் உயிர் என்று சொல்லின் முதலில் வந்தாலும் பசு படு அது என்ற சொற்களில் சு டு து என்று சொற்களின் இறுதியில் வந்தாலும் அவை ஒரு வினாடியே எடுத்துக் கொள்கின்றன.


kuTTrriyaligaram(இ)

kuTTrriyaligaram means the letter இ will have a shorter sound. This only happens when two words join together to make a combined word. When the first word ends with the உ sound the second words begin with ய sound. The ending உ sound in the first word will change its pronunciation to இ. This changed sound will have a shorter duration of half a second. Also in the word மியா (ம்+இ) the இ sound will interact with யா and sound out in a shorter duration. It is important to note that these grammatical rules are mainly used in poetic Tamil.


குற்றியலிகரம்(இ)

குற்றியலிகரத்தில் இ குறைந்த ஒலியோடு ஒலிக்கும். இரு சொற்கள் இணையும் போது முதல் எழுத்தின் கடைசியுள்ள “உ” இகரமாக மாறும். இவ்வாறு மாறும் இகரம் தன் ஒலியிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது போல இ என்ற எழுத்து யா என்ற எழுத்தோடு சேரும் போதும் இ எழுத்தின் ஒலிக் குறையும். குற்றியலிகரம் செய்யுளில் மட்டுமே வரும்.


Igaarakurukkam(ஐ)

The letter ஐ is called the Igaaram. When the letter duration is shorter then two seconds it is called the Igaarakurukkam. This letter takes the two seconds only to identify itself. In other times it takes one and half seconds. For example in the word ஐந்து the letter ஐ only has a duration for one and half seconds. In the words தையல் கைது the letters தை, கை also have the duration of one and half seconds. The same can be said for the words where the ஐ sound comes in middle or the ending of the sound. வளையம், மனைவி words have ளை, னை letters have the ஐ sound in the middle. The words பூனை மாலை have னை, லை sounds in the end of the word with similar duration of one and half seconds.


ஐகார குறுக்கம்(ஐ)

உயிரெழுத்தான ஐ ஐகாரம் என்று அழைக்கப்படுகிறது. அது தன் இயற்கையான ஒலியளவான இரண்டு வினாடிகளை விட குறைந்து நேரத்தில் ஒலிக்கும் போது அது ஐகார குறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஐ தன்னைத் தானே அடையாளம் காட்டும் போது மட்டுமே இரெண்டு வினாடிகள் ஒலிக்கிறது.மற்ற நேரங்களில் அது ஒலிப்பதற்கு ஒன்றரை வினாடிகளே எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக தையல் கைது என்றசொற்களில் தை கை ஒலிப்பதற்கு ஒன்ற்றை வினாடிகளே எடுத்துக் கொள்கிறது. வளையம் மனைவி என்ற சொற்களில் நடுவில் வந்த போதும் ளை னை என்ற எழுத்துக்களில் ஐ ஒன்றரை வினாடிகளே ஒலிக்கிறது. பூனை, மாலை என்ற வார்த்தைகளிலும் னை லை என்ற எழுத்துக்கள் ஒன்றரை வினாடிகளே ஒலிக்கின்றன.


owgarakurrukkam(ஒள)

The letter ஒள is called the owgarakurrukkam. Similar to the letter ஐ the letter ஒள pronounce for two seconds to identify itself. Other times it is it only needs one hand half seconds to sound it out. So it is called owgaarakurrukkam. ஒளவை, வெளவால் these words begin with the sound ஒள and வெள. This has only one and half second pronounciation.


ஒளகாரக் குறுக்கம்(ஒள)

ஓள என்ற உயிரெழுத்து ஒளகாரம் என்று அழைக்கப்படுகிறது. தன்னை அடையாளம் காட்டும் போது மட்டும் தான் ஒள என்ற எழுத்தும் இரண்டு வினாடிகளுக்கு ஒலிக்கும். மற்ற நேரங்களில் அது ஒன்றரை வினாடிகளே எடுத்துக் கொள்ளும் அதனால் இது ஒளகாரக் குறுக்கம் என்று அழைக்கப்படும். ஒளவை, வெளவால் என்ற வார்த்தைகளில் ஒள, வெள என்ற எழுத்துக்கள் ஒன்றரை வினாடிகளே எடுத்துக் கொள்ளும்.


Makarakurrukkam(ம்)

Makarakurrukkam is the letter ம். The letter ம் will take only one forth second to pronounce then it is called the magarakurukkam. When the letter ம் follows the letters ண,ன it wil have the shorter sound. This rule only apply in the grammatically correct verse called cheuuL. Also when a word ends by ம் and the next word begins with வ the ம் will have shorter than usual sound.For example போகும் வழி நானும் வருவேன்


மகரக் குறுக்கம்(ம்)

ம் என்ற மெய்யெழுத்து ஒரு ஒற்று. பொதுவாக அரை வினாடி எடுத்துக்கொளும் இவ்வெழுத்து ஒலிப்பதற்கு கால் வினாடியே எடுத்துக் கொள்ளும் போது இது அது மகரக் குறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. செய்யுளில் ம் என்ற எழுத்து ண, ன என்ற எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போது குறுகி ஒலிக்கும். அது போல முதல் சொல் ம் என்ற எழுத்தில் முடிந்து இரண்டாவது சொல் “வ” வில் தொடங்கும் போது மகரம் குறைந்து ஒலிக்கும். எடுத்துக்காட்டு. போகும் வழி நானும் வருவேன்


Aayuthak kuRukkam(ஃ)

The aayuthak kuRukkam is ஃ. The letter ஃ will take only one forth of a second to pronounce. Then it is called the aayudhak kurukkam. When the first words end with ல், or ள் and the next word starts with த sound,and the words combine the ல ள will change it to ஃ. It will take only one forth of a second.


ஆய்தக் குறுக்கம்

ஆய்த எழுத்தான ஃ தன் இயல்பான அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறையும் போது அது ஆய்தக் குறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. முதல் சொல்லின் இறுதியில் ல் அல்லது ள் என்ற எழுத்து வந்து அடுத்த சொல் த என்று தொடங்குமானால் அது ஃ என்று மாறி கால் வினாடி தான் ஒலிக்கும்.