அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

தமிழ் இலக்கணம் ஒரு அறிமுகம்!


தமிழ் இலக்கணம் தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது அது தமிழில் பிழையின்றி எழுத உதவுகிறது. மேலும் தமிழ் இலக்கியங்களை ரசிக்க உதவுகிறது. தமிழ் இலக்கணம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை


  1. எழுத்து இலக்கணம்
  2. சொல் இலக்கணம்
  3. பொருள் இலக்கணம்
  4. அணி இலக்கணம்
  5. யாப்பு இலக்கணம்

தமிழ் எழுத்துக்களின் தன்மையை விளக்கிச் சொல்வது எழுத்து இலக்கணம். எழுத்துக்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விதிகளைச் சொல்கிறது. சொல் இலக்கணம் தமிழ் சொற்களின் தன்மையை விளக்கிச் சொல்கிறது. வாழ்விற்கு முக்கியமான அன்பு வீரம், ஈகை ஒழுக்கம் அறம் என்றக் குணங்களை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணம். செய்யுள்களின் வகைகள் பற்றியும் அவற்றை எப்படி அமைப்பது என்றும் விளக்குவது செய்யுள் இலக்கணம். உரைநடை செய்யுள் இரண்டிலும் உள்ள பொருள் மற்றும் சொல் அழகினை பிரித்துக் காட்டுவது அணி இலக்கணம். தமிழைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் உதவி செய்வது இலக்கணமாகும்.

An Introduction

This is an introduction to Tamil grammar. Tamil Grammar helps us understand the structure of the language. By learning and understanding grammar we can write in Tamil without any mistakes. We can also enjoy the Tamil literatures better. Tamil grammar has five parts. They are

  1. Grammar for Letters
  2. Grammar for Words
  3. Grammar for Meaning
  4. Grammar for Form
  5. Grammar for Method

Grammar for letters explains the characteristics of Tamil letters. It also gives rules as to how to use these letters. Grammar for words explains the characteristics of Tamil words. Grammar for meaning explains the characteristics of good living like love, bravery, charity and good behavior. Grammar for poems explains the types of poems and how to write the poems. Grammar of beauty explains the beauty of words and their meaning in prose and poems. To learn Tamil the right way, we have to learn and understand the grammar the right way too. Tamil Grammar helps us read and write Tamil without any mistakes.